வாணிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்



                தமிழ்நாட்டின் வேட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் வாணிதாசன் 1915 ஆம் ஆண்டு ஜீலை 22 ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும்.
               இவருடைய பாடல்கள் "தமிழ் கவிதைக் களஞ்சியம்" வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.
               இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
               தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். வாணிதாசன் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பு பெரும் புகழ் பெற்றது.
               வேறு பெயர்கள்: கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமைக் கவிஞர்.
                நூல்கள்: இரவு வரவில்லை, இன்ப இலக்கியம், எழில் விருத்தம், சிரித்த நுணா, வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி போன்ற பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
               வாணிதாசன் தனது 59ஆவது வயதில் 1974ல் மறைந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்