திருவள்ளுவர் சிலை

      
 
         "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
            பகவன் முதற்றே உலகு"
என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர்.


சிலையின் வரலாறு:
          திருவள்ளுவர் சிலையானது கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரமுள்ள சிலை ஆகும்.


சிலை உருவான விதம்:

          1978 ஆம் ஆண்டு, பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு 5000 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச் சிறந்த சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்தப் பிரமாண்டமான சிலையானது சனவரி 1இல்  2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


சிலையின் அமைப்பு:
          திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்புக் கொண்டதாகும்.
       சிலையினுள் 140 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
          பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
         மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளது.


சிலையின் அளவுகள்:

  •           முக உயரம் - 10 அடி
  •           கொண்டை - 3 அடி
  •           முகத்தின் நீளம் - 3 அடி
  •           தோள்பட்டை அகலம் -  30 அடி
  •           கைத்தலம் - 10 அடி
  •           உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
  •           இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
  •           கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் - 10 அடி


சிலையின் சிறப்பு:
         இந்த சிலை உலகளவில் மிகப் பிரபலமான சிலைகளில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்துலேயே மிகப் பெரிய சிலை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  உலகில் இந்த சிலைபோன்று கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
      இந்த திருவள்ளுவர் சிலையானது இந்தியாவில் உள்ள மக்களை மட்டுமல்லாமல் சுற்றுலா வரும் பல நாட்டவரையும் வெகுவாக வியக்க வைக்கிறது.
  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்