சிரிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்
😊நன்கு சிரிப்பதால் முகத்தில் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது.
😊இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டு வர சிரிப்பு உதவுகிறது.
😊வாய்விட்டு சிரிக்கும் போது சிரிப்பு உங்கள் மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கும்.
😊சிரிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது.
😊சிரிக்கும் போது மூளையில் அதிக எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
😊நீண்ட சிரிப்பு உடலில் உள்ள அதிக கலோரிகளை நீக்க பயன்படுகிறது.
😊சிரிக்கும் போது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது. இதனால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது.
😊நாம் தொடர்ந்து சிரிப்பதால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
😊நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும் போது ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் நமது உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
😊சிரிப்பதால் தசைகளில் ஏற்படும் வலிகள் தவிர்க்கப்படும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
😊சிரிப்பு சமுதாயத்தோடு நாம் ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்கிறது. உதாரணமாக, அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக