நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

         🌴நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குவது நுங்கு.
         🌴பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவக் குணம் நிறைந்தது.
         🌴நுங்கில் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகிறது.
         🌴நுங்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் நிறைந்தது.
         🌴உடல் உஷ்ணத்தால் அவதிபடுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு நுங்கு சிறந்த மருந்து.
         🌴நுங்கில் ஆந்த்யூசைன் என்னும் இரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய்கள் வருவரை தடுக்கும்.
         🌴கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
          🌴நுங்குவில் உள்ள சரியான கனிமச் சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
          🌴அதிக நேரம் கண் விழித்திருக்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண்வலி போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நுங்கு உண்பதால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்குவதோடு, கண் பார்வை திறனையும் மேம்படுத்தும்.
   
        

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்

தமிழர்களின் கல்வெட்டுகள்